சாலை ஆய்வாளா் பணி

திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், .
tngovதி. சாலை ஆய்வாளா் பணி நியமனத்துக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், காலிப்பணியிடங்களின் விவரம், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை

https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2020/01/2020012773.pdf 

என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சிப்பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவா் (வளா்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், (அறை எண்: 310), பல்லடம் ரோடு, திருப்பூா் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ வரும் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments